The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Opening [Al-Fatiha] - Tamil Translation - Omar Sharif - Abridged Version
Surah The Opening [Al-Fatiha] Ayah 7 Location Maccah Number 1
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.
புகழ் அனைத்தும் அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;
(அவன்,) கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!
(அது,) நீ அருள் புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்.

